திருமணம் முடித்த புதிய ஜோடி, முதலிரவு அன்று தனியறைக்கு சென்றிருந்தது. சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்த கட்டில் திரென, பாரிய சத்தத்துடன் உடைந்து விழுந்துள்ளது. இதனால், அந்த ஜோடி காயமடைந்துள்ளது.
காயமடைந்த ஜோடியை, உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஒரு அறையில், இருவரும் ஒன்றாக இருக்கவேண்டிய நாளில், வைத்தியசாலையில் தனித்தனியான ஆண் வாட்டில் மாப்பிள்ளையும், பெண் வாட்டில் மணமகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், கொழும்புக்கு நெடும் தூரத்திலிருக்கும் கிராமம் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
முதலிரவு அன்று, கட்டில் உடைந்த விவகாரம், தொடர்பில், கண், காது, மூக்குகளை வைத்து கிராமவாசிகள் பேசிக்கொள்கின்றனர்.
கிராமவாசிகள் கூறுவதைப் போல பார்த்தால்,
இந்த ஜோடியை சேர்ந்த இருவரும் இரு மாகாணங்களை சேர்ந்தவர்கள். ஆடைத்தொழில்சாலையில் தொழில்புரியும் போது, இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன், மாகாணத்திலுள்ள பிரபலமான ஹோட்டலில், மிக பிரமாண்டமான முறையில், திருமண வைபவம் நடைபெற்றது.
அன்றையதினம் ஹோட்டலிலேயே தங்கியிருந்த ஜோடி, மாப்பிள்ளையின் வீட்டு மறுநாள் சென்றுள்ளது.
மணமகள் வழங்கிய சீர், சிறப்புடன் வரதட்சணைகளையும் எடுத்துகொண்டே, மாப்பிள்ளையின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
புதிய கட்டிலையும் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், அன்றிரவு அந்த அறையிலிருந்த பழைய கட்டிலிலேயே இவ்விருவரும் தூங்குவதற்கு சென்றுள்ளனர்.
கொஞ்சநேரத்தில், அந்த அறையின் கட்டில் உடைந்து விழும் சத்தம் கேட்டுள்ளது.
அருகருகே இருந்த அறைகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் என்னவோ, ஏதோவென தெரியாமல், அறையின் கதைவை தட்டியுள்ளனர்.
நீண்டநேரம் ஆகியும், கதவு திறக்கப்படவில்லை.
எனினும், புதிய ஜோடி சத்தம் மட்டுமே போட்டுள்ளது.
பின்னர், அவ்வறையை திறந்துள்ளனர் உறவினர்கள் பார்த்தபோது, கட்டில் அலங்கோலமாக இருந்துள்ளது.
வீட்டிலிருந்த தைலங்களை, அடிப்பட்ட இடங்களுக்கு பூசுவதற்கு முயற்சித்த போதிலும், அதற்கு புதுஜோடி இடமளிக்கவில்லை.
அதனையடுத்து,இவ்விருவரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என கிராமவாசிகள் கதை,கதையாக கூறுகின்றனர்.