ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தளர்த்தப்பட்டிருந்த வேளையில், பெண்ணொருவரை விடுதிக்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர், திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம், காலி எல்பிட்டி பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
அந்த நபர், நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனேகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான இந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதே பிரதேசத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணொருவருடன் விடுதிக்கு வந்து அறையில் தங்கியிருந்த போது அந்த நபருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அறையில் அந்த நபருடன் தங்கியிருந்த பெண் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்துள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உடலை பரிசோதித்தவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு செல்லும் முன்னர் குறித்த பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த நபருடன் இந்த பெண் சுமார் ஒரு வருட காலமாக தவறான தொடர்பில் இருந்துள்ளது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எல்பிட்டிய பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.