ஓடும் காரில் அதிகாரியுடன் பெண்ணொருவர் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த காரிலேயே பெண்ணுடன் அதிகாரி ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில், ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக பணிகளுக்காக அரசு சார்பில் வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனம், அந்நாட்டின் முக்கிய சாலையில் மாலை நேரத்தில் சென்று கொண்டிருந்தது.
அந்த வாகனத்தில் பின் இருக்கையில் ஒரு அதிகாரி அமர்ந்திருந்தார். அவரது மடியில் இளம் பெண் ஒருவர், சிகப்பு நிற ஆடை அணிந்தபடி, அந்த அதிகாரியின் மடியில் அமர்ந்து, அந்த அதிகாரியுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார்.
அப்போது, அந்த கார் அங்குள்ள சிக்னல் ஒன்றில் நிற்கிறது. அந்த காரின் இருபுறமும் மற்ற வாகனங்கள் வந்து நிற்கின்றன. ஆனால், இதைப் பற்றிய கவலைப்படாத அந்த அரசு அதிகாரி, அந்த இளம் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார்.
பின்னர், சிக்னல் போட்டதும், அந்த கார் புறப்பட்டுச் செல்கிறது. அப்போதும் கூட, அந்த ஜோடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்ட படியே அந்த காரில் பயணிக்கின்றனர்.
இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவால் பதிவாகி தற்போது வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு அந்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து ஐ.நா. சபை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா. சபையின் செய்தி தொடர்பாளர், டுஜாரிக், “இது போன்ற செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாம் எதற்காக பணியாற்றுகிறோமோ, எதற்காகக் குரல் கொடுக்கிறோமோ. அதற்கு எதிரான குற்றம் இது” என்றும் கூறினார்.