புருஷனை அசால்ட்டாக அடித்து கொன்று தூக்கிலேயே தொங்கவிட்டுவிட்டார் மனைவி.. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாசமா போன கள்ளக்காதல்... அதுவும் மச்சினனுடன்!
புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்.. 32 வயதாகிறது.. இவரது மனைவி கவுசல்யா.
இந்நிலையில், கோபிநாத் திடீரென இறந்துவிட்டார்.. தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு முதலியார்போட்டை போலீசில் விஷயத்தை சொன்னார்கள்.
போலீசாரும் விரைந்து வந்து கோபிநாத் சடலத்தை மீட்டனர்.. அப்போதுதான் அவரது தலை, முகம் பகுதியில் ரத்த காயங்கள் கிடந்ததை கண்டனர்.. கோபிநாத் உடலை கைப்பற்றி விசாரணையும் நடத்தினர்.
அப்போதுதான், கோபிநாத்தின் தம்பி அதாவது சித்தப்பா மகன் கார்த்தியுடன் கவுசல்யாவுக்கு கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.. மச்சினனுடன் இப்படி தகாத உறவு இருப்பதை அறிந்த கோபிநாத் கடும் அதிர்ச்சி அடைந்தார்.. அதனால், தம்பியையும், மனைவியையும் கண்டித்தார்.
இது இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு பிடிக்கவில்லை.. அதனால், கோபிநாத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர்.. அதில் அவரது உயிர் பிரிந்துள்ளது.. இறுதியில் தூக்குப்போட்டு தொங்கவிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல 2 பேரும் டிராமா செய்துள்ளனர்.. இவ்வளவும் தெரியவந்ததை அடுத்து, முதலியார்பேட்டை போலீசார், அண்ணியையும், மச்சினனையும் கைது செய்து உள்ளே வைத்தனர்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.