தன்னுடைய நான்கு வயது மகனையும் எட்டுவயது மகனையும் கணவனையும் விட்டுவிட்டு, கள்ளக் காதலுடன் ஓடிபோன 27வயதான மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்னேரியா பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்துள்ளார்.
அரலகங்விலவை வசிப்பிடமாகக் கொண்ட அந்த பெண், கடந்த கொரோனா காலத்தில். தனக்கு வந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.
37 வயதான நபருக்கும் அப்பெண்ணுக்கும் இடையில் தொடர்பு அதிகரித்தது. காதல் மலர்ந்தது.
இதனிடையே, 30 வயதான கணவனையும் இரண்டு மகன்மார்களையும் விட்டுவிட்டு கள்ளக் காதலுடன் அப்பெண் ஓட்டமெடுத்தார்.
சம்பவம் தொடர்பில், அக்கணவன் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், அப்பெண்ணை கண்டுப்பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர். கள்ளக் காதலனும் அப்போது வந்திருந்துள்ளார்.
எனினும், தன்னுடைய காதலுடன் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு அப்பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிள்ளைகளை கவனிக்காமல் விட்டமைக்காக, வழக்குத் தாக்கல் செய்யலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கள்ளக் காதனை விட்டுவிட்டு, கணவன், பிள்ளைகளும் செல்வதற்கு அப்பெண் விருப்பம் தெரிவித்தார்.
அந்த நால்வரையும் பொலிஸார் அனுப்பிவைத்தனர்.
பஸ்ஸில் ஏறிய அப்பெண், தான் மலசலக்கூடத்துக்கு செல்லவேண்டுமென கணவனிடம் தெரிவித்துள்ளார்.
பஸ் புறப்படுவதற்கு முன்னர் சென்றுவருமாறு கூறிய கணவன், வெகுநேரமாக காத்திருந்துள்ளார்.
இறங்கிச் சென்ற மனைவி, பஸ் புறப்பட்டு செல்லுவரையிலும் திரும்பவே இல்லை.
எனினும், பஸ்ஸிலிலிருந்து இறங்கிய அந்தப் பெண், மலசலக்கூடத்துக்கு செல்லாமல், தனது கள்ளக் காதலனுடன் சென்றுவிட்டாள்.