யாழ்ப்பாணத்தில், நடமாடித் திரிந்து அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்யும் ஒருவர், அங்கிருந்த இளம் பெண்ணிடம் ‘ரேட்’ எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
இளம் பெண்ணிடம் ‘ரேட் எவ்வளவு’ என்று கேட்டு தரக்குறைவாக நடந்துகொண்ட ஒருவரை அந்தப் பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்துள்ள சம்பவம் யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.
யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நடமாடித் திரிந்து அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்யும் ஒருவர், அங்கிருந்த இளம் பெண்ணிடம் ‘ரேட்’ எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த நபரை முறைத்துப் பார்த்த அந்தப் பெண் விடயத்தை பெரிதுபடுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அங்குள்ள வியாபார நிலையத்தில் பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் அவ்வழியாக அந்தப் பெண் சென்ற போது மீண்டும் அதே ஆள் ‘ரேட்’ கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த குறித்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை இழுத்துப் போட்டு உதைத்துள்ளார். உதைத்தது மட்டுமல்லாமல் அவரை பொலிஸ் நிலையம் வருமாறு கோரி இழுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, அந்த நபர் பெண்ணின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து அவரை பிழைத்துப் போகுமாறும் இனிமேல் பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் நிலைமை மோசமாகும் என்றும் எச்சரித்துச் சென்றுள்ளார்