சுழன்றிடும் இவ்வுலகே திகைத்திட
உயிர்கள் அனைத்தும் உறைந்திட
எதிர் பாராமல் எல்லாம் தடைப்பட்டு போனது உன் வருகையால்..
கோடிக்கணக்கில் காவு வாங்கும் நீ
முன் ஜென்ம அரக்கனா?
இல்லை, தமிழர் பண்பாட்டை மீள திரட்டிட வைத்த நீ
முன் ஜென்ம தேவனா?
பள்ளி பருவம் கடந்து போகின்றன
பட்ட படிப்பும் இடையே தடைபட்டு
வெளியுலகம் தெரியாது
ஓர் அறைக்குள் அடிமைப்பட்டு வாழ்கிறோம்
இது நம் சாபமா??
இருப்பினும் உன் வருகை தமிழரை தலை நிமிர செய்கிறது
எம்மை ஆண்ட ஆங்கிலேயன் இன்று கை குலுக்க பயந்து கும்பிட்டு வணங்குகிறான்
இது உன் சாதி விளையாட்டா??
உண்மை அறிய ஆசைப்படுகிறேன் நீ யார்??
உலகையே திருப்பிப்போட்ட உன் ஆவேசம் குறையட்டும் இன்றுடன் ?