web log free
September 16, 2024

பனை வைத்தியம்! பாரம்பரிய சாஸ்திரம்!

பனைமரத்தின் அருமை அதனை உணர்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும் 

அதுபோல பனை மரங்களை அழிக்க நினைத்தாலே இவ்வுலகமே அழிந்துவிடும் என்பதை மறந்துவிடாதே!!

நாம் வாழும் இந்த வாழ்க்கை நமது முன்னோர்கள் வைத்து வளர்த்து விட்டுச் சென்ற பனை மரங்களால் மட்டுமே!!

பனை மரங்களை வளர்த்தால் நீ உயிர் வாழ்வாய்!! பனை மரங்களை அழித்தாள் நீயும் அழிந்து விடுவாய்!!

* பனங்கல்கண்டு

தென்னை மரங்களில் இருந்து உணவிற்கு பயன்படும் தேங்காய் மற்றும் இன்ன பிற உபயோகத்திற்காக பொருட்கள் கிடைப்பது போலவே, பல உபயோகமான பொருட்களை தரும் ஒரு மரமாக பனை மரம் இருக்கிறது. பனை மரத்தில் இருந்து மனிதர்கள் சாப்பிடுவதற்கு பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்றவை கிடைக்கின்றன. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். இந்த பனங்ககற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

* பனங்கற்கண்டு_பயன்கள்

1.ஜலதோஷம்

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.

2.வாய்_துர்நாற்றம்

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுவது சகஜம். உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

3.உடல்சத்து

தினந்தோறும் கடுமையான உடலுழைப்பில் இருப்பவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும். உங்களின் உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைப்பதுடன், உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.

4.தொண்டைக்கட்டு

ஜலதோஷ பாதிப்பால் சிலருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது இதனால் அவர்களால் சரியாக பேசமுடியாமல், சாப்பிட முடியாமலும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சனையை போக்க 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகும்.

5.ஞாபக_சக்தி

மூளையின் செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நபர்களுக்கு ஞாபகத்திறன் அதிகம் இருக்கிறது. ஞாபத்திறன் மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.

6.நோய்_எதிர்ப்பு

எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.

7.சிறுநீரக_கற்கள்

கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இப்பிரச்சனையை தீர்க்க 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் சுலபத்தில் கரையும். சிறுநீரகங்களின் செயல்படும் மேம்படும்.

8.கர்ப்பிணி_பெண்கள்

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் வரை ஒரு சில உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பனங்ககற்கண்டுகளை கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணமாகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

9.ஜுரம்

ஜுரம் என்பது பொதுவாக உடலின் சராசரியான வெப்பநிலையை அதிகரிக்க செய்து உடலை பலவீனமாக்கி செயல்பட முடியாமல் செய்து விடும் ஒரு நோயாகும். ஜுரங்களில் டைபாய்டு, வைரல் சுரம் மற்றும் உடலின் நுரையீரலில் ஏற்படும் நீர்க்கட்டு போன்ற வியாதிகளை போக்குவதில் பனங்கற்கண்டு சிறப்பாக செயல்படுகிறது.

10.உடல்வெப்பம்

கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் பனகற்கண்டுகளை அதிகம் சாப்பிடுவதாலும் பானங்களில் பனங்கற்கண்டுகளை கலந்து பருகுவதால் உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகள் அனைத்தையும் நீக்க முடியும்.

 

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்! பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!

Last modified on Thursday, 21 October 2021 05:19