20வது திருத்தச் சட்டத்திற்கு ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போது அமைச்சுப் பதவி எதுவும் இன்றி ஏமாற்றத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றத்தில் உள்ளார்.
ஆளும் அரசாங்கத்துடன் இணைந்த பின் தனக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த அவர், தான் அங்கம் வகித்த கட்சியை பகைத்துக் கொண்டு தனியாக தொழிற்சங்கம் ஒன்றை ஏற்படுத்தி ஏனைய கட்சிகளைச் சேர்ந்த அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரையும் தனது அணிக்குள் இணைத்துக் கொண்டார்.
ஆனால் இன்னும் இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்காத காரணத்தால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் அநியாயமாக தனது அரசியல் எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.