தென்மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமிபியாவில் கடுமையான பஞ்சம் நிலவுவதால் அவசரநில சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நமிபியா நாட்டில் சுமார் 25 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். தனிநபர் வருமானத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மழை பொய்த்துப் போகும் காலங்களில் கடுமையான பஞ்சம் மற்றும் பசி, பட்டினியால் மக்கள் திண்டாடுவது தவிர்க்க முடியாத சூழலாக உள்ளது.
இந்த ஆண்டும் போதிய அளவில் பருவமழை பெய்யாததால் மக்களுக்கு தேவியான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரநில சட்டத்தை அந்நாட்டின் ஜனாதிபதி ஹகே ஜிய்ன்கோப் பிரகடனப்படுத்தியுள்ளார்.