இந்திய நாடாளுமன்ற தேர்தலின் 6ஆவது கட்ட தேர்தலுக்காக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்திய நாடாளுமன்றின் 7 கட்ட தேர்தலில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், 6-வது கட்ட வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது.
இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இறுதி கட்ட தேர்தல் 19ஆம் திகதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறவுள்ளதுடன், வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.