web log free
April 18, 2024

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மதியம் முன்னணி நிலவரம் தெரியவருவதுடன், மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.

 

ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி தொடங்கி கடந்த 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதுடன்,

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

 

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து இருக்கிறது.

கடந்த 19ஆம் திகதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.