இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, மீண்டும் ஆட்சியமைக்கத் தயாராகிவருகிறது.
அண்மை நிலவரப்படி 542 தொகுதிகளில் 185 இடங்களை பாரதீய ஜனதா கட்சி தனித்து வெற்றிப்பெற்றுள்ளதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த இடங்களைத் தவிர முன்னிலை வகிக்கும் மற்ற இடங்களிலும் வெற்றி உறுதியானால், பாரதீய ஜனதா எந்தவொரு கட்சியின் ஆதரவுமின்றித் தனித்து ஆட்சியமைக்கத் தகுதிபெறும்.
காங்கிரஸ் கட்சி 32 இடங்களைத் தனித்து வென்றுள்ளது. கூட்டணி அடிப்படையில் பார்த்தால், ஆகக் கடைசி நிலவரப்படி 201 இடங்களில் பா.ஜ.க கூட்டணியும் 53 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.