web log free
June 25, 2026

கத்திக்குத்து: 3 பேர் பலி; 19 பேர் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள கவாசக்கி நகரில் நபர் ஒருவர் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், பூங்காவில் இருந்த 13 குழந்தைகள் உட்பட 19 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

நோபோரிடோ பகுதியில் அமைந்துள்ள பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

கத்திக்குத்துத் தாக்குதல் சந்ததேக நபரை கைதுசெய்து தற்போது விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd