web log free
February 25, 2026

25 பெண்கள் வன்புணர்வு - குற்றவாளிக்கு மரணதண்டனை


சீனாவின் ஹினான் மாநிலத்தில் 25 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜாவ் ஜியோங் (Zhao Zhiyong) என்னும் 49 வயது நபர், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கட்ட 14 பெண்கள் 14 வயதுக்குக் குறைவானவர்கள்.

அத்துடன், குறித்த நபருக்கு உதவிய 3 பேருக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பாக 2017ஆம் ஆண்டு தகவல்கள் வெளியானதுடன், அதைத் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd