ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளில் தாய்லந்து மீன் இறக்குமதிகளுக்குத் தடை விதிக்கப் போவதாக விடுத்த மிரட்டலை மீட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டவிரோதமான, முறைப்படுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தாய்லந்து நல்ல முன்னேற்றம் கண்டு வருவதே அதற்குக் காரணம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.
தாய்லந்து மீன் இறக்குமதிகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான எச்சரிக்கையை அது, 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் விடுத்தது.
அப்போது முதல், தாய்லந்து அதன் மீன்பிடித் துறைக்கான சட்ட அமைப்புமுறையை, அனைத்துலகச் சட்டத்திற்கு இணையாகத் திருத்தி அமைத்துள்ளது. மேலும், அது தனது கண்காணிப்புக் கட்டமைப்புகளையும் மேம்படுத்தியுள்ளது.