மத்திய அமெரிக்காவில் வீசும் பனிப்புயல், அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
சனிக்கிழமை மாலை தொடங்கிய பனிப் பொழிவு நாளை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 60 செண்டிமீட்டர் அளவு பனிப்பொழிவும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
போஸ்டன் (Boston) நகரத்தில் -14 டிகிரி செல்சியஸ் எனும் கடுங் குளிர் ஏற்படலாம்.
கிழக்கு அமெரிக்காவில் பனிப்புயல் வீசும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் 100 மில்லியன் பேர் அதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடுமையான பனியால் பல விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.