தென் அமெரிக்க நாடான சிலியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொகிம்போ என்ற நகரத்திற்கு 15 கிலோமீட்டர் தென் மேற்கில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.
தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கில் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
உடனடி சேதம் பற்றியும் காயமுற்றோரின் எண்ணிக்கை பற்றியும் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.