இரு முக்கிய எண்ணெய் தொழிற்சாலைகளின் மீது இடம்பெற்றுள்ள ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து அந்த எண்ணெய் தொழிற்சாலைகளில் பாரிய தீ மூண்டுள்ளது.
சவுதி அரேபியாவின் அரம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீதே ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குராயிஸ் என்ற எண்ணெய் வயலினை இலக்குவைத்துஇரண்டாவது டிரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரோன் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை உறுதி செய்துள்ள சவுதிஅரேபிய அதிகாரிகள் எனினும் இந்த தாக்குதல்களை யார் மேற்கொண்டது என்பது குறித்த விபரங்களை வெளியிடவில்லை
கடந்த சில மாதங்களாக சவுதி அரேபியாவின் விமானநிலையங்களை இலக்குவைத்து யேமனின் ஹெளத்தி ஆயுத குழுவினர் ஆளில்லா விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.