web log free
April 19, 2024

200 சிறுவர்கள் பாலியல் வல்லுறவு- நபர் சிறையில் கொலை

200ற்கும் மேற்பட்ட  குழந்தைகளையும் சிறுவர்களையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக பிரிட்டனின் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த குற்றவாளியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த 200ற்கு மேற்பட்ட குழந்தைகளையும் சிறுவர்களையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் இணையத்தளங்களில் அந்த படங்களை பரிமாறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் புல்சட்டன் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்த வந்த புகைப்படப்பிடிப்பாளர் ரிச்சட் ஹக்கில் என்பவரே சிறையில் கொல்லப்பட்டுள்ளார்.

சிறையில் கொல்லப்பட்டுள்ள ஹக்கில் 2006 முதல் 2014 வரையான காலப்பகுதியில் ஆறு மாதம் முதல் 12 வயதான குழந்தைகள் பிள்ளைகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த குற்றங்களிற்காக 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு ஹக்கில்  கொலை செய்யப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரின் வறிய கிறிஸ்தவ சமூகத்தினர் மத்தியில் தன்னை ஆசிரியராகவும் சமூகசேவையாளராகவும் சித்தரித்த ஹக்கில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தார்.

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் குறித்த விசாரணையின் போதே அவுஸ்திரேலிய காவல்துறையினர் ரிச்சட் ஹக்கிலும் இந்த வகை குற்றங்களில் ஈடுபடுவதை கண்டுபிடித்திருந்தனர்.

பின்னர் இவர் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக லண்டன் வந்தவேளை விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

Last modified on Tuesday, 15 October 2019 02:50