`600 யோகா ஆசிரியர்கள்; 90 வருடங்களுக்கு மேல் பயிற்சி'- காலமானார் யோகா பாட்டி' நானம்மாள்! நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 100 ஆகும்.
கோவை கணபதி, அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நானம்மாள். இவரின் அப்பா, தாத்தா, பாட்டி அனைவருமே யோகாவில் கெட்டிக்காரர்கள். இதனால், தனது எட்டு வயதிலி ருந்தே நானம்மாள் யோகா செய்துவந்தார். 90 ஆண்டுகளுக்கும் மேலாக யோகாவையே தனது மூச்சாக சுவாசித்துக் கொண்டிருந்தார், நானம்மாள்.
இதுவரை சுமார் 10 லட்சம் பேருக்கு யோகா கற்றுக் கொடுத்துள்ளார். 600-க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார். இதன் காரணமாக, யோகா பாட்டி என்று அனைவராலும் பாசமாக அழைக்கப்பட்டுவந்தார்.
இவரை கௌரவிக்கும் விதமாக, மத்திய அரசு கடந்த ஆண்டு நானம்மாளுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கியது. ஏராளமான பதக்கங்களையும் நானம்மாள் பெற்றுள்ளார். இயற்கை உணவு, யோகா என்று வாழ்ந்துவந்த நானம்மாள், உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனை பக்கம் ஒதுங்கியதுகூட இல்லை.
நானம்மாள், ஒருநாளும் யோகா செய்யத் தவறியது இல்லை. 'கடைசிவரை யோகாவை விடமாட்டேன்' என்று சொல்வார்.
இந்நிலையில், கடந்த வாரம் கட்டிலில் இருந்து கீழே விழுந்த வருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 99. இதுகுறித்து நானம்மாளின் உறவினர்கள், “கடந்த வாரம் வரை நானம்மாள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுவந்தார்.
ஆனால், கட்டிலில் இருந்து விழுந்த பிறகு அவரால் முடியவில்லை. ‘எல்லோரும் நல்லாருக்கணும்’ என்று சொல்வார். தனது கடைசி நேரத்தில்கூட அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தார்” என்றனர்.