web log free
December 04, 2024

பாலியல் வழக்கில் அமெரிக்க பாடகர் கைது

பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல அமெரிக்க பாடகர் Chris Brown பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருடம் ஜனவரி 15 ஆம் திகதி இரவு விடுதி ஒன்றில் வைத்து 24 வயது பெண் ஒருவரை Chris Brown பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த பெண் இது குறித்து தெரிவிக்கும் போது, “Chris Brown ஐ நான் எட்டாம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வைத்து சந்திக்க நேர்ந்தது. அதன் பின்னர் நானும் எனது தோழி ஒருவரும் Chris Brown ஐ முதலாம் வட்டாரத்தில் உள்ள ஆடம்பர தங்குமிடம் ஒன்றில் சந்தித்தோம்.

அப்போது Chris Brown என்னை அத்துமீறி பலியல் பலாத்காரம் மேற்கொண்டார். அவருடன் அவரது நண்பர் மற்றும் மெய்க்காப்பாளரும் என்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர்” என குறிப்பிட்டார்.

இதனையடுத்து, திங்கட்கிழமை பரிசில் வைத்து மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். விரைவில் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Chris Brown உலகெங்கிலும் 100 மில்லியன் இசைத்தட்டுகள் விற்று அமெரிக்காவின் மிக பிரபலமான பாடகராக இருந்தார். தவிர பாடகி ரிஹானாவின் முன்னாள் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd