மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் சடலத்தை பேரிடர் மீட்பு படையினர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மீட்டனர்.
உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதால் அதை தார்பாலின் பாயை கொண்டு மூடி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் சுஜித் உடலை உடற்கூராய்வு செய்ய மருத்துவர் குழு மணப்பாறை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
நீண்ட போராட்டம் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற நீண்ட போராட்டத்துக்கு பிறகு சிறுவன் சுஜித் சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளான்.
சுஜித்தின் கைகள் முற்றிலும் சிதைந்துவிட்டதால் அவனது உடலை இடுக்கி போன்ற கருவியை கொண்டு கவ்வி பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.
சிறுவன் சுஜித் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை தார்பாலின் பாயை கொண்டு மூடி அதிவேகமாக பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடற்கூராய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
சிறுவன் சுஜித் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை சுஜித்தின் உறவினர்கள் நடுகாட்டுபட்டியில் செய்து வருகின்றனர்.
மணப்பாறை பகுதியில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே அதற்கு மத்தியில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மழையின் இரைச்சலை தாண்டியும் நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள சிறுவன் சுஜித் இல்லத்தில் அழுகுரல் விண்ணை பிளந்தது.