web log free
September 03, 2025

விடாமல் துரத்திய பேயால் விபரீதம்

பேய் என்றால் அனைவருக்கும் பயம் தானாகவே வந்துவிடும். அப்படியிருக்கையில் நபர் ஒருவர் துங்கும் போது கனவில் பேய் துரத்துவதை அறிந்த நபர் ஓடிச்சென்று கிணற்றுக்குள் குதித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அயினிவிளை பகுதியில் கோவில் அர்ச்சகர் ஒருவர் நடந்து சென்ற போது, அருகே இருந்த கிணற்றிலிருந்து சத்தம் வருவதை உணர்ந்து கிணற்றினை எட்டிப்பார்த்த போது அங்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இரும்பு வலைக்கதவு போட்டு மூடப்பட்ட கிணற்றில் சிறிதளவு கிடந்த தண்ணீரில் கதறி இளைஞரை அவதானித்த அர்ச்சகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றிலிருந்து இளைஞரைக் காப்பாற்றி உள்ளனர்.

பின்பு அவரிடம் விசாரித்த போது, பேய் துரத்துவது போன்று கனவு கண்டதால் ஓடிவந்து இவ்வாறு கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே குறித்த கிணற்றில் புதையல் இருப்பதாகவும் வதந்தி ஒன்று பல நாட்களாக உலாவருவது குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 23 November 2019 05:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd