web log free
September 03, 2025

பிரிட்டனில் போரிஸ் வெற்றி

பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்.

50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தெரிவித்தன. 

தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜெரமி கார்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 

பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 349 தொகுதிகளில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 

இதனால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஏற்கெனவே கைவசம் இருந்த பல்வேறு தொகுதிகளை இழந்த தொழிலாளர் கட்சி, 202 இடங்களை பிடித்திருந்தது. 

அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியானபின்னர், போரிஸ் ஜோன்சன், பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

Last modified on Saturday, 14 December 2019 02:45
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd