web log free
January 09, 2026

WhatsApp, Instagram, Facebook Messenger ஐ ஒன்றிணைக்க நடவடிக்கை

Facebook நிறுவனம் அதன் WhatsApp, Instagram, Facebook Messenger ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.

மூன்று சேவைகளும் தனித்தனி செயலிகளாகத் தொடரும் அதேவேளை, அந்த மூன்று செயலிகளின் தகவல்களும் ஒன்று மற்றொன்றுடன் ஒருங்கிணைந்திருக்கும் என Facebook தெரிவித்துள்ளது.

உதாரணத்துக்கு, ஏதேனும் ஒரு செயலியை மட்டுமே பயன்படுத்துவோருடன், மற்றொரு செயலி வழியும் மற்றவர்கள் தகவல்களை அனுப்பலாம்.

அது இவ்வாண்டு இறுதிக்குள், அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் சாத்தியமாகலாம்.

அந்த மூன்று செயலிகளுக்கும் இடையே பொதுவான தொடர்பு ஏதும் இல்லை என்பதால், தற்போது அது சாத்தியமல்ல.

அத்தகைய சேவைகளின் ஒருங்கிணைப்புக்கான நீண்ட செயல்முறையின் தொடக்கமே இது என Facebook குறிப்பிட்டது.

மூன்று சேவைகளையும் பயனீட்டாளர்களுக்கு மேலும் பயனுள்ளதாக வைத்திருக்கவும், அவர்கள் அவற்றில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் அந்த புதிய முயற்சி உதவும் என்பது அதன் நம்பிக்கை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd