சீனாவுக்கான கனெடிய தூதர் ஜான் மெக்கலமைப் (John McCallum) கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பணி நீக்கம் செய்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட Huawei நிறுவனத்தின் உயர் அதிகாரி மெங் வான்ஸோவை கனடா அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பில் மெக்கலம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணக்க மெங்கை கனடா தடுத்து வைத்துள்ளமை காரணமாக சீனா கோபமடைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மெங் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.