பிரான்சில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் மஞ்சள் சட்டை இயக்கத்துக்கு எதிராகத் தலைநகர் பாரிஸில் முதல் பேரணி நடைபெற்றுள்ளது.
பேரணியில் 10,000 பேர் கலந்துகொண்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
பேரணியில் கலந்துகொண்டோர் சிவப்புத் துண்டைக் கழுத்தைச் சுற்றி அணிந்துசென்றனர்.
மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டங்களால் விளையும் வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், புரட்சிக்கு எதிர்ப்பாகவும் அவர்கள் குரல் கொடுத்தனர்.