இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 900ஐ தாண்டி உள்ளது. நாடு முழுக்க 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது ஸ்டேஜ் 2 பரவல் முறையில் கொரோனா பரவி வருகிறது. இது விரைவில் ஸ்டேஜ் 3யை எட்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் 10 நாட்களில் இந்தியாவில் கொரோனா தீவிரம் அடையலாம் என்கிறார்கள். இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை இந்தியாவில் 21 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாடு முழுக்க 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 84 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளானார். 840 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகமாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.