web log free
April 19, 2024

“அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பர்”

அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது. வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது. ஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள். அதே போல் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

Last modified on Saturday, 04 April 2020 06:25