web log free
November 03, 2025

கூகுளுக்குஅபராதம் விதிப்பு

ரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.

ஆனால் ‘கூகுள்’ தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தன.

இதையடுத்து சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை ‘கூகுள்’ நிறுவனம் செலுத்தி விட்டதாக ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Last modified on Saturday, 02 February 2019 04:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd