web log free
November 23, 2024

அலட்சியமாகச் வீதியை கடந்தால் அவமானம்

சீனாவின் நகர்ப்புறங்களில், காவல்துறை அதிகாரி கண்ணில் தென்படாவிட்டாலும் கூட, விதிகளுக்குப் புறம்பாக வீதியை அலட்சியமாகக் கடப்பது விபரீதமாக முடியக்கூடும்.

காரணம், உலகின் ஆக வலுவான முக அடையாள முறையுடன், மேம்படுத்தப்பட்ட வீதி கண்காணிப்புக் கேமராக்களையும் கொண்டுள்ளது சீனா.

சாலையை அலட்சியமாகக் கடப்போருக்கு போக்குவரத்துக் பொலிஸாரிடமிருந்து அபராதம் குறித்த குறுஞ்செய்தி உடனுக்குடன் வரும்.

அதுமட்டுமின்றி, அவர்கள் பொது இடத்தில் அவமானப்படுத்தப்படுவர். நவீன முக அடையாள முறை அதனைச் சாத்தியமாக்குகிறது.

நடந்தோ, சைக்கிளிலோ, சாலையை அலட்சியமாகக் கடப்போரின் முகங்கள் அருகிலுள்ள பெரிய திரையில் காண்பிக்கப்படும். சாலை விதிகளை அவர்கள் மீறுவதை அனைவரும் பார்க்கமுடியும்.

முக அடையாள முறை மூலம் ஒருவர் பதிவுசெய்யப்பட்ட உடன், அவரது கைத்தொலைபேசி எண் உள்ளிட்ட இதர விவரங்கள் அதனுடன் இணைக்கப்படுவதால், அபராதம் குறித்த குறுஞ்செய்தி உடனேயே அனுப்பப்படும்.

சீனா உலகின் ஆகப் பெரிய நிழற்பட அடையாள தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 200 மில்லியன் கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படுகின்றன.

முக அடையாளத் தொழில்நுட்ப முறை சீன மக்களின் வாழ்வில் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அந்தரங்கம் குறித்த கேள்வியையும் அது எழுப்பியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd