வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உடல்நலத்துடன் உயிருடன் இருப்பதாக தென்கொரிய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
“கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறார், அவர் ஏப்ரல் 13 முதல் வொன்சன் பகுதியில் தங்கியிருக்கிறார். அவரது ஆரோக்கியம் குறித்தான எமது நிலைப்பாடு உறுதியானது” என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மூன் சுங்-இன் , சி.என்.என். இடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 ம் தேதி தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைத் தவறவிட்டதால் கிம்மின் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசியற்குழுக் கூட்டத்தில் காணப்பட்டார் என்று வட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.