வட கொரியாவின் அணுவாயுத, ஏவுகணை திட்டங்கள் இன்னும் செயல்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விமான நிலையங்களிலும் பொது இடங்களிலும் அணுவாயுதங்களை அது மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்துக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் நிபுணர்கள் அவ்வாறு குறிப்பிட்டனர்.
வட கொரியா மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்கு எவ்வித பயனும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்டவிரோதமாக எண்ணெய்ப் பொருள்களைப் பெற்றுக்கொள்வது, தடைசெய்யப்பட்ட நிலக்கரி, ஆயுதங்கள் ஆகியவற்றை விற்பது போன்ற நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை இரண்டாம் முறையாக சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் வேளையில், அந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.