அமெரிக்காவின் கொலராடோ மாகாண எல்லையில் உள்ள உடாஹ் என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தமது பெற்றோரின் காரை கலிபோர்னியாவை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுவன் தமக்கு (அமெரிக்காவில் சுமார் 2லட்சம் டொலர் பெறுமதிக்கொண்ட) லம்போஹினி கார் ஒன்று வேண்டும் என்று தமது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
எனினும் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே குறித்த சிறுவன் வெறுமனே 3 டொலர்களை எடுத்துக்கொண்டு தமது பெற்றோரின் காரில் லம்போர்ஹினி காரை கொள்வனவு செய்யும் நோக்கும் வீதியில் சென்றுள்ளார்.
இதன்போது காரின் ஓட்டம் குறித்து சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அதனை நிறுத்தி சோதனை செய்தபோது சாரதி இருக்கையில் 5 வயது சிறுவன் இருந்திருக்கிறார்.
இதனையடுத்து அவரை அதில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றினர். இந்த செய்தியை காவல்துறையினர் பதவிவேற்றியநிலையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதனையடுத்து பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த குழந்தையின் செயல் தொடர்பில் பெற்றோரும் பொறுப்பாளிகள் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறாவனர்கள் கோடீஸ்வரர்களாக அல்லது குற்றவாளிகளாக மாறுவார்கள் என்று சிலர் தெரிவித்துள்ளனர்