இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்திற்கு வருகை புரிந்ததைச் சீன வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது.
அந்த இடத்தைச் சீனாவும் உரிமை கோருகிறது. அந்தப் பகுதியில் இந்தியத் தலைவர்களின் நடவடிக்கைகளை முற்றிலும் எதிர்ப்பதாகச் சீனா தெரிவித்தது.
மே மாதம் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார்.
இருநாடுகளுக்கிடையில் உறவை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தென் திபெத் என்று சீனா சொல்லும் வட்டாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது.