மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள சமூக ஊடகங்களில் மேலும் தடம் பதித்து வருகிறார்.
தற்போதைய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைப் பற்றிய அவரது குறைகூறல்களைச் சமூக ஊடகங்களில் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட தன் பெயரை மீண்டும் நிலைநிறுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சி அது என்று வல்லுநர்கள் கருத்துரைத்தனர்.
1MDB வழக்கில் தான் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவது அதன் நோக்கம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.