அலுவலகக் காரில் பெண் ஒருவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐ.நா ஊழியர்கள் இருவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் ஐ.நாவின் அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் காரில் பெண் ஒருவருடன் ஐ.நா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட வீடியோவானது அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது.
இந் நிலையில் இவ் விடயம் குறித்த விசாரணை முடியும் வரை அவர்கள் இருவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
இடை நீக்கம் செய்யப்பட்ட இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பில் பணியாற்றுபவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.