web log free
April 25, 2024

இறைச்சிக்காக வளர்ப்பு நாய்கள்

உணவுப் பற்றாக்குறையால் வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகள் மட்டுமல்லாது அண்டை நாடான தென் கொரியாவுடன் முறைப்பு, குதர்க்கமாகவே பேசிக் கொண்டிருக்கும் இளம் அதிபர் கிம் ஜாங். இவர் தலைமையிலான வட கொரியா நாட்டில் தற்போது உணவுப் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு, மக்களிடம் உள்ள வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்குமாறு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீட்டில் நாய் வளர்க்கக்கூடாது எனவும் அப்படி வளர்ப்பது முதலாளித்துவத்தின் சிந்தாந்தத்தின் கறைபடிந்த போக்கு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாட்டில் உணவுப் பற்றாக்குறையை போக்க இப்படி அதிரடியாக அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் மக்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்

Last modified on Wednesday, 19 August 2020 08:46