இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங், இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம்.
தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.