web log free
November 01, 2025

இரவில் நண்பர்களால் இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்.!

சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட நாள் சண்டையிட்டு பிரிந்து இருந்த நண்பரான அய்யப்பனுடன் மீண்டும் இணைந்ததை கொண்டாடும் விதமாக நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தோணி மது அருந்தியுள்ளார்.

நள்ளிரவு வரை அதிக மது அருந்தியதை அடுத்து திடீரென அந்தோணி மற்றும் அய்யப்பன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதில் அந்தோணி மட்டும் தனி ஆளாக நின்றுள்ளார். அய்யப்பன் தனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அந்தோணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Last modified on Friday, 18 September 2020 16:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd