web log free
April 24, 2024

பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், கிளர்ச்சியாளர் முகாம் ஒன்றைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆகாயத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக, பாகிஸ்தான் சூளுரைத்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையே நடத்துவரும் மோதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் எல்லையில் பலாகொட் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை தொடங்கியது.

அண்மையில் 40 இந்திய படையினரைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலை நடத்திய கிளர்ச்சிக் குழுவுக்கே அந்த முகாம் சொந்தமானது என இந்தியா தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஜைஷே முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதாக இந்தியா சொன்னது.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் கட்டுப்பாடுகளை இந்தியா மீறிவிட்டதாக அது குற்றஞ்சாட்டியது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு அரசியல் பின்னணிக் காரணம் என்று பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு தரப்பையும் அவற்றுக்கு இடையிலான பதற்றநிலையைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சீனா கேட்டுக்கொண்டுள்ளது.