web log free
April 19, 2024

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், அதனை சுற்றியுள்ள 3 மாகாணங்களிலும் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதுவரையில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3, 548 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், வைரஸ் தொற்றைத் கட்டுப்படுத்தும் பொருட்டு, டோக்கியோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் அவசர கால  நிலையை ஜப்பானின் மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய பல நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 05 January 2021 06:44