இந்தியாவில் தற்போது தயாரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள 71 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 84 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மேலும் 6ற்கும் மேற்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி தொடர்பான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அறிவியலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேலும் தெரிவித்துள்ளார்.