உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் குழு ஒன்று 150க்கும் மேற்பட்ட நாடுகளின் தரவுகளிலிருந்து இது தொடர்பான விவரங்களைச் சேகரித்தது. அதில், சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட புதிய முயற்சிகளே இரட்டையர்கள் அதிக எண்ணிக்கையில் பிறப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
1980ம் ஆண்டிற்குப் பின் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 லட்சம் குழந்தைகள் இரட்டையர்களாகப் பிறப்பதாகவும் தெரியவந்துள்ளது. உலகிலேயே ஆபிரிக்காவில் தான் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும் அந்த புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது