நோர்வே நாட்டின் பிரதமர் எர்னா சோல்பெர்க், தனது 60வது பிறந்த நாளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உறவினர்களுடன் இணைந்து கொண்டாடினார். நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளின் படி, ஒரு இடத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த பிரதமரே உத்தரவை மீறி 13 பேருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால், அவரிடம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.
மேலும், அவருக்கு ஆயிரத்து 165 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதிக்கவும் போலீசார் முடிவெடுத்துள்ளனர். இருப்பினும், தமது தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார்.