web log free
November 21, 2024

72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது

72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் உலக மருந்தகமாக இந்திய திகழ்கிறது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் தஞ்சாவூர், பூதலூர் பகுதியில் திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்க்ள் கிஷன் ரெட்டி, வீகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். இங்கு ஜேபி நட்டா விற்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி, தமிழ் மொழியின் தமிழ் இலக்கியங்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கு உண்டானதாகும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் சொல்லிற்கு ஏற்ப காங்கிரஸ்,  திமுக தமிழர்களால் முழுமையாக தோற்கடிக்க வேண்டும் இந்த இரண்டு கட்சிகளும் மன்னராட்சி போல வாரிசுகளை கொண்ட கட்சியாக உள்ளது. இந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் ஆட்சி கொண்டு வரவேண்டும். திமுக, காங்கிரஸ் காட்சிகள் இரண்டு தலைமுறை மூன்று தலைமுறை நான்கு தலைமுறை ஊழல் என கொண்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத புறக்கணிக்கக் கூடிய கட்சிகள் .

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சட்டம் முறியடிக்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு குறைந்த அளவிலான தொகையை ஒதுக்கியது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு பதினொரு மருத்துவக் கல்லூரிகளை ஒதுக்கியதோடு 12 ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சிக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு குழு கட்டமைப்பிற்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி என்பது இரண்டும் தேசிய கூட்டணியாக இணைந்து உள்ளது. அதிமுக பாஜக அரசு இணைந்து செயல்படுவதினால் உலகையே அச்சுறுத்திய கொரனா தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. கொரோனாவை  கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 72 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து உலகத்தின் மருந்தகம் ஆக இந்திய மாறியுள்ளது    தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பாஜக வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன்,தெற்கு மாவட்ட தலைவர் பண்ணை வயல் இளங்கோ,பொதுசெயலாளர்ஜெய்சதீஸ்,  அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.எம்.சுப்ரமணியன், ரெத்தினசாமி மற்றும் அ.தி.மு.க , ப.ஜ.கவை சேர்ந்த மாநில,மாவட்ட, நகர அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd