எகிப்து நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
எகிப்தின் டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்த பலர் இன்னும் மீட்கப்படவில்லை என்பது சோகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விபத்து எமர்ஜென்சி பிரேக்கை தவறுதலாக யாரோ இயக்கியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் முதல் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கவிழ்ந்துவிட்டன.