பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்குள்ள மருத்துவமனைகள் திணறிவருகின்றன.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் பேரில் 450 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்படுவதாக தற்பொழுது புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளதால் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் நிலையில் உயிரிழப்புக்களும் அதிகரித்துவருகின்றன.