நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி சிறையில் இருந்து 1,800க்கும் அதிகமான கைதிகளை அந்நாட்டு பிரிவினைவாதிகள் தப்பிக்கச் செய்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான பிரிவினைவாதிகள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை மாணவர்களை கடத்துவது, கடற்கொள்ளையில் ஈடுபடுவது என தொடர்ந்து பல்வேறு அட்டூழியங்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதுடன் அரசுக்கு சிம்மசொப்பனமாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் Owerri நகரில் உள்ள சிறைச்சாலையின் சுவரை வெடிவைத்து தகர்த்த பிரிவினைவாதிகள், தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகளுடன் சிறைக்குள் சென்று அங்கிருந்த காவலர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் சிறையில் இருந்து 1,800க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.